தற்கொலை செய்தவர்களின் உறவினர்களைக் கவனிப்போம்!

இந்து தமிழ் திசையின், காமதேனு வார இதழில் வெளியான கட்டுரை, 18/11/2021 ஒவ்வொரு ஆண்டும் எச்.ஜ.வி., மலேரியா, மார்பகப் புற்றுநோய், கொலை மற்றும் போரினால் இறப்பவர்களைவிடத் தற்கொலையால் இறக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020-ல் இந்தியாவில் நிகழ்ந்த 1,53,052 தற்கொலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 16,883 தற்கொலைகள் நடந்துள்ளதாகவும், அதில் 22 சம்பவங்கள் கூட்டுத் தற்கொலைகள் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்துள்ளது. அக்கறை என்ற பெயரில்… தன்னையே ஒருவர் மாய்த்துக்கொள்வதைContinue reading “தற்கொலை செய்தவர்களின் உறவினர்களைக் கவனிப்போம்!”

நம் வாழ்வு நமதென்போம்!

இந்து தமிழ் திசை, இணைய பக்கத்தில் வெளியான என் கட்டுரை, நவம்பர் 03, 2021. இயல்பிலேயே ஒவ்வொருவரும் ஆற்றல் மிகுந்தவர்கள். சவால்கள், சங்கடங்கள், கொந்தளிப்புகளைச் சமாளித்து முன்னேறுகிறவர்கள். ஆனாலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், குறிப்பாக ஆண்களைவிட அதிகமான பெண்கள் மன அழுத்தத்தால் (stress) அவதிப்படுகின்றனர். நாள்பட்ட மன அழுத்தம் பதற்றம், மனச்சோர்வு, தூக்கக் கோளாறு, செரிமானப் பிரச்சினை, மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளிட்ட மனநலச் சிக்கல்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் இட்டுச் செல்வதால், மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தற்காத்துக்கொள்ளும்Continue reading “நம் வாழ்வு நமதென்போம்!”

மனநலப் பாதுகாப்பை நனவாக்குவோம்!

இந்து தமிழ் திசை, இணைய பக்கத்தில் வெளியான என் கட்டுரை, அக்.10, 2021 மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது, ஒருவருடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் ஆகியவை அந்நபருடைய உளவியல், உடலியல் வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது ஆகும். மகிழ்ச்சியாக வாழவும், நம் ஆற்றலை முழுமையாகContinue reading “மனநலப் பாதுகாப்பை நனவாக்குவோம்!”

விளையாட்டு வீரர்களின் மனநலம்: காலத்தின் கட்டாயம்

இந்து தமிழ் திசை, இளமை புதுமை இணைப்பிதழில் செப்.24, 2021 அன்று வெளியானது. விளையாட்டு வீரர்கள் பள்ளி, கல்லூரி, தனியார் அமைப்புகள் மற்றும் நாடுகளின் முகவரிகளாகவும் நல்லெண்ணத் தூதர்களாகவும் திகழ்கிறார்கள். தாங்கள் தாங்கியிருக்கும் அடையாளத்துக்குப் புகழ் சேர்க்க, நிதியுதவி செய்கிறவர்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தீரா ஆவலுடன் போராடுகிறார்கள். உடல் பலம் இருந்தாலும், இத்தொடர் முயற்சியில் பல காரணிகள் மனதளவில் தளர்வுறச் செய்வதால், விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மனநல ஆலோசகர்கள் அவசியம் என்கிற புரிதல் உலக அளவில்Continue reading “விளையாட்டு வீரர்களின் மனநலம்: காலத்தின் கட்டாயம்”

நீயே ஒளி… நீதான் வழி!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, செப்டம்பர் 10, 2021 வாழ்வுக்கானப் போராட்டம் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது என்றாலும் வெற்றியும் தோல்வியும் நிறைந்த இப்போராட்டத்தில் தங்கள் உயிரை சிலர் பாதியிலேயே முடித்துக்கொள்கிறார்கள்; ‘வலுவுள்ளவையே வாழும்’ என்கிற டார்வினின் கோட்பாட்டை, உடல்பலத்தோடு மட்டுமல்லாமல் மனபலத்துடனும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் போகிறார்கள். உலகில் நிகழும் 100 இறப்புகளுள் ஒன்று தற்கொலையால் நிகழ்கிறது. அதிலும் 77% ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நடக்கிறது.Continue reading “நீயே ஒளி… நீதான் வழி!”

தாய்ப்பாலின் உன்னதம் அறிவோம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஆகஸ்ட் 04,2021 குழந்தைகளுக்குத் தாய்மார்கள் கொடுக்கும் உன்னதப் பரிசு தாய்ப்பால். குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களில் கிடைக்கும் சீம்பால் விலைமதிப்பற்றது. தாய்ப்பாலில் எல்லாவகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் காரணமாகிறது. இரைப்பை சார்ந்த சிக்கல்கள், நிமோனியா, நீரிழிவு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத் தொற்றிலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் தாய்ப்பால் காக்கிறது. ஞாபக சக்தி, சிந்தனைContinue reading “தாய்ப்பாலின் உன்னதம் அறிவோம்!”

மனிதக் கடத்தல் பெருங்குற்றம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 30,2021 பணத்துக்காக, குழந்தைக்காக, பழிவாங்க, பலி கொடுக்க குழந்தைகள் கடத்தப்படுவதை அடிக்கடி வாசிக்கிறோம். எங்கேயோ, யாரையோ கடத்தியிருக்கிறார்கள் என அடுத்தச் செய்திக்குக் கடந்துவிடுகிறோம். ஆனால், மனிதர்களைக் கடத்துதல், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இருப்பது பெருங்கொடுமை. ஏழைகள், மொழி தெரியாதவர்கள், கல்வியறிவற்றவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்றச் சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டைவிட்டு ஓடிவந்தவர்கள், இயற்கைப் பேரிடர்,Continue reading “மனிதக் கடத்தல் பெருங்குற்றம்!”

இணையவழி மிரட்டலைத் தடுப்போம்!

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுலை 16,2021 கல்லூரியில் மாணவர்கள் கேலி செய்யப்படுவதைத் தவிர்க்க இயலாது என்னும் புரிதல் 1990-களில் தமிழ்நாட்டில் இருந்தது. மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை செய்யப்பட்ட பிறகு, 1997-ல் தமிழ்நாட்டு அரசு கொண்டுவந்த ராகிங்குக்கு எதிரான சட்டம், இக்கொடும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கல்லூரிகளில் ‘ராகிங் இல்லா வளாகம்’ அமையவும், கேலிக்குள்ளாகிறவர்கள் புகார் தெரிவிப்பதற்கான அமைப்பு கல்லூரிகளில் ஏற்படவும் இச்சட்டம் வழிவகை செய்தது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து,Continue reading “இணையவழி மிரட்டலைத் தடுப்போம்!”

இது பேயின் தாக்கமல்ல, நோயின் தாக்கம்

இந்து தமிழ் திசை, நடுப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை, ஜுன் 28, 2021 சமீபகால நகைச்சுவை – திகில் திரைப்படங்களைப் பார்த்து நாம் வயிறு வலிக்க சிரித்திருக்கிறோம். மன பாரம் குறைந்த மகிழ்வில் நன்கு தூங்கியிருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே திகிலுறும்போது ஒருவரால் சிரிக்க முடியுமா? மனம் சமநிலையில் இருக்குமா? திகிலுறச் செய்யும் நிகழ்வுகள் ஒருவித மனநிலையை நமக்குள் தூண்டுகின்றன. இந்தத் தூண்டுதலால் பாதிக்கப்படாமல் ஒருசில நாட்களிலேயே பலர் சரியாகிவிடுகிறார்கள். ஆனாலும், மாதக்கணக்கில் வருடக்கணக்கில் திகிலில் இருந்து வெளியேறContinue reading “இது பேயின் தாக்கமல்ல, நோயின் தாக்கம்”

தாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது!

இந்து தமிழ் திசை நாளிதழின், ‘பெண் இன்று’ பகுதியில் வெளியான எனது கட்டுரை. ஜூன் 1, 2021. கருவுற்றிருக்கும் ஒரு பெண் தான் குழந்தை பெற்றெடுக்கப்போவது குறித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். கரு சுமப்பவள் என்னவெல்லாம் வாசிக்க வேண்டும், யாருடைய இசையை ரசிக்க வேண்டும், என்ன படம் பார்க்கலாம், எதையெல்லாம் சாப்பிடலாம் போன்ற கேள்விகளுக்கு முகநூலில் கணவர்கள் விடை தேடுகிறார்கள். தாயும் சேயும் நலமுடன் இருக்க தன் மகளை அல்லது மருமகளைContinue reading “தாய்மார்களின் மனநலனை மறந்துவிடக் கூடாது!”

Design a site like this with WordPress.com
Get started